உடுமலை, அக்.31: உடுமலை அருகே எரிசினம்பட்டி ஊராட்சி, வளையபாளையத்தில் ரேசன் கடை உள்ளது. அங்கு வசிக்கும் மக்களும், அருகில் தோட்ட சாலைகளில் வசிக்கும் மக்களும் இங்கு வந்து ரேசன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். ரேசன் கடை கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 20 ஆண்டுகளாகிறது. இதனால் கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது.
சுவர்களில் விரிசல் காணப்படுகிறது. சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே, விபரீதம் நிகழும் முன் இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.