பொன்னேரி: பழவேற்காட்டில் முன் விரோத காரணமாக, வீட்டைக் காட்டி ரீல்ஸ் வீடியோ எடுத்த வாலிபருக்கு, உருட்டு கட்டையால் சரமாரி அடி உதை விழுந்துள்ளது. பொன்னேரி அடுத்த பழவேற்காடு பூமிக்கோட்டை தெருவை சேர்ந்தவர் இப்ரஹிம்(22). மீன் தொழில் செய்து வருகிறார். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த செய்ஜமால் வீட்டு எதிரே வந்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து செய்ஜமாலுக்கு தெரிய வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்தவர், தனது சகோதரர் சர்தார் மற்றும் நண்பர்கள் உள்பட 7 பேருடன் சென்று இப்ரஹிம்மை தனது வீட்டிற்கு அழைத்துக் வந்தனர். ஏன் என் வீட்டை பார்த்து வீடியோ எடுத்தாய் என தாங்கள் வைத்திருந்த உருட்டை கட்டை மற்றும் கைகளால் சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர், கொலை செய்வதாக மிரட்டிவிட்டு அனுப்பிவிட்டனர். இதனால் இப்ரஹிம்முக்கு முகம், கை மற்றும் மார்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டது.
இது குறித்து இப்ராகிம் திருப்பாலைவனம் போலீசில் நேற்று புகார் அளித்தார். இது குறித்து வழக்கு புதிவு செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி நடத்திய விசாரணையில் செயஜமால் மற்றும் இப்ரஹிமுக்கும் முன் விரோதம் இருந்தது தெரிய வந்தது. இந்த சூழ்நிலையில் தான் செய்ஜமாலின் வீட்டை காட்டி இப்ரஹிம் ரீல்ஸ் வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது. இருப்பினும், ஆயுதங்கள் கொண்டு வாலிபரை தாக்கியதாலும் அடித்து உடைத்தும் கொலை மிரட்டில் விடுத்ததாலும் 7 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.