பொன்னேரி, நவ. 26: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பழவேற்காடு உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். நேற்று முதல் 29ம் தேதி வரையில் வங்கக்கடல் பகுதிகளில் 75கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மீனவர்களின் படகுகள், மீன்பிடி கலன்கள், வலைகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் பாதுகாப்பாக வைக்கவும் மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்க தடை
0
previous post