பழநி, ஜூலை 24: பழநி அருகே பாலசமுத்திரம், குரும்பபட்டியை சேர்ந்தவர் அன்பழகன் (55). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ஜோதி (52) என்பவருடன் டூவீலரில் பாலசமுத்திரம் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதாமாக முன்னாள் சென்ற டூவீலரில் அன்பழகன் தனது டூவீலரை மோதியதாக தெரிகிறது. இதில் நிலை தடுமாறி அன்பழகன் கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த கழிவுநீர் லாரி சாலையில் விழுந்து கிடந்த அன்பழகன் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜோதி சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பழநி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழநி அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி
52
previous post