பழநி, ஜூலை 10: பழநியில் கொலை குற்றவாளிகள் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பழநி அடிவாரத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (35). இவர் கடந்த மே மாதம் 3ம் தேதி பஸ் நிலையம் அருகில் பட்ட பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டது திண்டுக்கல் சிறையில் உள்ளனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஸ்ரீபாஸ்கரன் பரிந்துரை செய்தார்.
அதன்படி மாவட்ட கலெக்டர் பூங்கொடி கொலைக் குற்றவாளிகள் 4 பேரையும் குண்டர் தரப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பழநி டவுன் போலீசார் கொலை குற்றவாளிகளான அழகாபுரியைச் சேர்ந்த சுரேஷ் (27), அடிவாரம் தெற்கு அண்ணா நகரை சேர்ந்த மாரிமுத்து (28), சிங்கம்புலி (28), கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மாரிமுத்து (27) ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.