பழநி, மே 25: பழநி புறநகர், சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபர்களை பிடித்து விசாரித்ததில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பழநி அருகே பாலசமுத்திரத்தை சேர்ந்த கோகுலக் கண்ணன் (20), குபேரபட்டிணத்தை சேர்ந்த ஆறுமுகம் (22), கார்த்தி (23), கவுண்டன்குளத்தை சேர்ந்த முகமது ஷேக் அப்துல் காதர் (21), அப்பர் தெருவை சேர்ந்த நாகேந்திர பிரபு (19), அண்ணா நகரை சேர்ந்த சூர்யா (22), ஜவகர் நகரை சேர்ந்த சரவணகுமார் (19) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.