தேன்கனிக்கோட்டை, ஆக.28: தேன்கனிக்கோட்டையில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாரப்பன் தலைமை வகித்தார். மாநில சிறப்பு தலைவர் நஞ்சப்பன், மாநில தலைவர் கெம்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பழனி, பழங்குடி மக்கள் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமைய்யா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா, அரசு நலத்திட்டங்கள் வழங்க கோரி தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.
பழங்குடி மக்கள் சங்க கூட்டம்
previous post