உடுமலை, நவ. 6: மடத்துக்குளம் தாலுகா பகுதியில் உள்ள கொமரலிங்கம் பேரூராட்சி 14வது வார்டு பெருமாள்புதூரில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் ஆதார் கார்டு வழங்குதல், சாதிச்சான்றிதழ் வழங்குதல், வீட்டு மனைப்பட்டா, குடும்ப அட்டை மற்றும் வருவாய்துறை தொடர்பான அனைத்து சான்றிதழ்கள், வங்கி கணக்கு துவங்குதல், கல்வி உதவித்தொகை, சிக்கில் செல் நோய் கண்டறிதல், கிசான் கார்டு கிசான் சம்மன் வழங்குதல் தொடர்பான முகாம் நேற்று நடந்தது.
இதில் பேரூராட்சி தலைவர் சர்மிளாபானு, துணைத்தலைவர் அழகர்சாமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் லட்சுமி, கல்யாணி, சீத்தாலட்சுமி மற்றும் செயல் அலுவலர் கல்பனா, மடத்துக்குளம் வட்டாட்சியர், மடத்துக்குளம் வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ, மடத்துக்குளம் வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் தாமரைக் கண்ணன், பேரூர் திமுக செயலாளர் ஆச்சி முத்து, திமுக வழக்கறிஞர் சக்திவேல் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.