மதுரை, ஜூலை 3: மதுரை கலெக்டர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் மேம்பாட்டிற்கான திட்டங்களில் அவர்கள் பயனடையும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி பேரையூர் வட்டம் மொக்கத்தான் பாறையில் இன்று (ஜூலை 3) காலையிலும், அழகம்மாள்புரத்தில் மதியமும் சிறப்பு முகாம் நடக்கிறது. மேலூர் வட்டம் வலையபட்டி கிராமத்தில் நாளையும், மதுரை மேற்கு வட்டம் துவரிமானில் நாளை மறுநாளும், குலமங்கலத்தில் 6ம் தேதியும், வாடிப்பட்டி வட்டம் கோட்டைமேடு மற்றும் மண்ணாடிமங்கலம் பகுதிகளுக்கு கோட்டைமேட்டில் 7ம் தேதியும் இந்த முகாம் நடைபெறவுள்ளது. பழங்குடியின மக்கள் முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆதார் கார்டு, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள், சாதிச்சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், முதியோர் ஓய்வூதியம், விதவை, ஊனமுற்றோர் உதவித்தொகை, கிசான் கிரெடிட் கார்டு, ஜன்தன் கணக்கு, வன உரிமைப்பட்டா போன்றவற்றிற்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்
0