கும்பகோணம், ஆக.19: கும்பகோணத்தில் பாணாதுறை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.கும்பகோணத்தில் பாணாதுறை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கூட்டமைப்பு கூட்டம் தலைமையாசிரியை ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைகுழு செயல்பட்டு வருகின்றது.
இக்கூட்டமைப்பு செயல்முறைகளை கண்காணிக்கவும், வழி நடத்தவும், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் மூலமாக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்திலையில் அடுத்த இரண்டு ஆண்டுக்கான (2024-2026) பள்ளி மேலாண்மை குழுவிற்கான புதிய உறுப்பினர்களாக கயல்விழி தலைவராகவும், மஞ்சு துணைத்தலைவராகவும் மற்றும் 24 பேர் உறுப்பினராகவும் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், வட்டாரக்கல்வி அலுவலர் மதியழகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராமலிங்கம், வட்டார வள மைய பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் மற்றும் முதுநிலை வருவாய் அலுவலர் பிரகாஷ், சிவநாதன் பார்வையாளராக செயல்பட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி மற்றும் கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர் ஆதிலெட்சுமி ராமமூர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.