முத்துப்பேட்டை, ஆக. 18: முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் காசடி கொள்ளை அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு (பொறுப்பு) தலைமையாசிரியை அகி லா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பார்வையாளராக கடுவெளி பள்ளி தலைமையாசிரியர் முருகன் கலந்து கொண்டு செயல்பட்டார். அப்போது கூட்டத்தில் 24பேர் கொண்ட குழு புதிதாக தேர்வு செய்யப்பட்டது. அதிலிருந்து தலைவராக தீபா என்பவர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகளை கிராம கமிட்டி நிர்வாகிகள் ராஜேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள் இதில் மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.