சாயல்குடி, செப்.2: கொளுந்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. முதுகுளத்தூர் அருகே கொளுந்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில், 2024-2026ம் ஆண்டிற்காக பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. தலைமையாசிரியர் அன்பரசி தலைமை வகித்தார். சிறப்பு பார்வையாளர் ஆசிரியர் பயிற்றுனர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் சக்திகுமார் வரவேற்றார்.
இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி தலைவராக மலர்மாரி, துணை தலைவராக பகவதிமாரி, முன்னாள் மாணவர் சங்க உறுப்பினராக சம்பத்குமார் மற்றும் பெற்றோர் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் விஜயகுமாரி,கல்பனாதேவி மற்றும் பெற்றோர் 79 பேர் கலந்து கொண்டனர்.