தா.பழூர், ஆக. 6: பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக்கான ஆயத்த கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் எஸ்எம்சி பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பிற்கான ஆயத்த கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஃபிளோமன் ராஜ் தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர் ஆனந்தி முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் இளவழகன், பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வரும் 10.8.2024 மற்றும் 17.8.2024 ஆகிய இரண்டு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் நடைபெறக்கூடிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.