தர்மபுரி, ஆக.26: தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன் தலைமை வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலை வைத்தார். கூட்டத்தில், பள்ளி மேலாண்மை குழுவிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் சண்முகப்பிரியா பள்ளி மேலாண்மை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் முல்லைவேந்தன், சுருளிராஜன், வெல்டிங் ராஜா, வக்கீல் ரமேஷ், கோல்டன் அன்பழகன், காசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு
previous post