சிவகங்கை, ஆக.12: சிவகங்கை பழமலை நகர் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. தலைமையாசிரியர் அசோக்பாரதி தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழுவின் மாவட்ட மேற்பார்வையாளர் சாஸ்தா சுந்தரம் பள்ளி மேலாண்மை குழுவின் சிறப்பு செயல்பாடுகளையும், மாணவ,மாணவிகளுக்கு பெற்றோர்கள் வழிகாட்ட வேண்டிய முறைகள் குறித்தும் பேசினார்.சிவகங்கை இல்லம் தேடிக் கல்வியின் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் கமல்ராஜன் கல்வியின் சிறப்புகளை எடுத்துக் கூறினார். பள்ளி உதவி ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார். பள்ளி மேலாண்மை குழு தலைவராக ரஞ்சிதா, துணைத் தலைவராக தீபா மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.