கடத்தூர்: கடத்தூர் அடுத்த ஒபிளிநாக்கியனஅள்ளி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜோதி அம்புரோஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கேசவன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் முருகன் கலந்து கொண்டு பேசினார். இதில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இடைநிற்றல் இல்லாமல் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துதல், பள்ளி மானிய நிதி செலவினம் பற்றி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்துரையாடல், தூய்மையை மேம்படுத்த பள்ளி வளாகத்தில் வேம்பு, புங்கன், நாவல் உள்ளிட்ட பழ வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இதில், ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கர், வார்டு உறுப்பினர் மாதையன், மேலாண்மைக்குழு உறுபினர்கள், இல்லம் தேடி கல்வி பணியாளர்கள், பள்ளி இருபால் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.