தேனி: தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நேற்று மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான ஹாக்கி போட்டி நடந்தது. இப்போட்டிகளை தேனி-அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுப்பிரியாபாலமுருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன், தேனி நகர்மன்ற துணைத் தலைவர் செல்வம் துவக்கி வைத்தனர். மாணவ, மாணவிகளுக்கான போட்டியில் 9 அணிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியர் அணிகளுக்கு தேனி மாவட்ட போலீஸ் ஏடிஎஸ்பி சுகுமார், டாக்டர்.முத்துக்குமார், விளையாட்டு அலுவலர் டெரி ஆகியோர் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினர்.