விழுப்புரம், ஆக. 12: விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. கடலூர் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அங்கேயே ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவி அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வாராம். அப்போது கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவருக்கு அந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 வருடமாக பழகி வந்த நிலையில் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்தபோது அவரிடம் தவறாக நடந்து கொண்டதில் 2 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை அறிந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறவே அதிர்ச்சியடைந்த பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.