வேலூர், நவ.10: வேலூர் சைதாப்பேட்டை ரோஷன் சுபேதார் தெருவை சேர்ந்தவர் இம்ரானா(15). இவர் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சிறுமிக்கு கடந்த 10 நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்தனர். அப்போது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வேலூர் வடக்கு போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.