காவேரிப்பட்டணம், ஆக.18: காவேரிப்பட்டணம் அடுத்த ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தனியார் வங்கியின் சமூகப் பொறுப்பு நிதி கொள்கை நிதியின் அடிப்படையில், மாணவிகள் 6 பேருக்கு நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடேசன், உதவித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். வங்கியின் கிளை மேலாளர் பிரபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். மேலும், நிதியுதவி வழங்கினார். மாணவிகள் லக்ஷதா, சுசி, கனிஷ்கா சாய், திவ்யா, கிருத்திகா, சைலு ஆகியோருக்கு நிதி உதவிக்கான வங்கி புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் முருகன், செல்லப்பா, இளையராஜா, ராமு, சரஸ்வதி, சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளி மாணவிகள் 6 பேருக்கு நிதியுதவி
previous post