சேலம்: சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் 50 மாணவிகள் நேற்று விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட சுற்றுலா துறையின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய சுற்றுலாவை, டிஆர்ஓ மேனகா தொடங்கி வைத்தார். இதில் மாவட்டம் முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதியில் தங்கி பயிலும் 50 மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் சுற்றுலா புறப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரசு அருங்காட்சியகம், சங்ககிரி கோட்டை, மேட்டூர் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.