திருப்புத்தூர், ஜூலை 31: திருப்புத்தூர் அருகே அரசு உதவிபெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு சீருடை மற்றும் சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் மெய்யம்மை ஆச்சி பிச்சகுட்டி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு சீருடை மற்றும் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்து மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கினார். கண்டரமாணிக்கம் வளர்ச்சி குழு தலைவர் மணிகண்டன் வரவேற்றார்.
சண்முகம் ராஜமாணிக்கம், சண்முகம் ராஜரத்தினம், கல்லல் ஒன்றிய திமுக செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன்,கருப்பையா, வட்டாட்சியர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சுஜாதா ராஜரத்தினம் மெமோரியல் சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக 50 மாணவிகளுக்கு சைக்கிள்களும், 112 மாணவியருக்கு சீருடை வழங்குவதற்கு சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் நிதி உதவி அளித்துள்ளனர்.
சிறப்பு விருந்தினர்களாக பொன்னாங்குடி ராமசாமி, மேக்குடி ராமச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், பள்ளி செயலாளர் பிச்சகுட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வளர்ச்சிக் குழு செயலாளர் ஆறுமுகம், கண்டரமாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராமு ஆகியோர் பேசினர்.தொடர்ந்து கலெக்டர் ஆஷா அஜித் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்ச்சியில் வலையபட்டி லட்சுமணன்,துபாய் லட்சுமணன்,உதவி பொறியாளர் விஜயலட்சுமி கிளை செயலாளர் ராமன் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை அமலா செல்வமேரி நன்றி கூறினார்.