தர்மபுரி, ஜூலை 19: தர்மபுரி வட்டார அளவிலான கூடைப்பந்து, போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், வரும் ஆகஸ்ட் மாதம் நடக்கிறது. இதையொட்டி தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், வட்டார அளவிலான போட்டியில் பங்கேற்கும் மாணவிகளுக்கு, கூடைப்பந்து பயிற்சி நேற்று வழங்கப்பட்டது. பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதே போல், பிற விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் தங்கரத்தினம், மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.
பள்ளி மாணவிகளுக்கு கூடைப்பந்து பயிற்சி
65