மதுரை, மே 25: தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கத்தின் மூலம் மேலூரில் உள்ள சொக்கம்பட்டி ரோட்டில் கஸ்தூரிபா மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவர். இந்த விடுதியில் இலவசமாக தங்கியிருந்து 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயில விரும்பும் மேலூர் சுற்றுவட்டார கிராமப்பகுதி மாணவிகள் விண்ணப்பப் படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். இத்தகவலை விடுதி செயலாளர் சீனிவாசன் கூறியுள்ளார். மேலும் விபரங்களுக்கு 93447 52688, 99946 57433 என்ற செல்போன் எண்களில் பெற்றோர் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.