கோபி,பிப்.23:கோபி அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(40). இவரது மகன் நித்தீஸ்(15). நித்தீஸ் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் இருந்து வெளியே விளையாட செல்வதாக கூறிச்சென்ற நித்தீஸ் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில் அவரது தாயார் சத்யா அளித்த புகாரின் அடிப்படையில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.