ஊத்தங்கரை, ஆக.15: சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, துவக்க பள்ளி, வெள்ளாளப்பட்டி, உப்பாரப்பட்டி, கல்லூர், ரெட்டிபட்டி உட்பட பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜேஆர்சி கணேசன் தேசிய கொடிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரை ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) பிரிஜிட் ரீட்டா மேரி, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், ஆசிரியர்கள் ஷோபனா, கவிதா, சக்தி, சுபைதாபானு, ஷகிலா, பாரதி, உமா, சரண்யா மற்றும் அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த 8 ஆண்டுகளாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு தேசிய கொடியை ஜேஆர்சி கணேசன் வழங்கி வருகிறார்.