தேன்கனிக்கோட்டை, ஜூன் 3: கெலமங்கலம் ஒன்றியத்தில், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தம், நோட்டுப்புத்தகம், காலணிகள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய தெலுங்கு தொடக்கப்பள்ளியில், தளி ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தம், நோட்டுப்புத்தகம், காலணிகள் மற்றும் சீருடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் மணி கிருஷ்ணா, லோகேஷா, பால்ராஜ், பயாஸ் மற்றும் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், தளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தம், நோட்டுப்புத்தகம், காலணிகள் மற்றும் சீருடைகள், 14 வகை பொருட்கள் அடங்கிய கல்வி உபகரணங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம்
0