தர்மபுரி, ஆக.30: பென்னாகரம் அருகே, குள்ளனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் விவரங்கள் அப்டேட் செய்யும் முகாம் நடந்தது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு, தற்போது ஆதார் எண் அவசியமாக தேவைப்படுகிறது. ஆதார் விவரங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால், நலத்திட்ட உதவிகள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுடைய ஆதார் எண் சார்ந்த விவரங்களை அப்டேட் செய்வதற்காக பள்ளிதோறும் ஆதார் முகாம்களை தற்போது நடத்தி வருகிறது. பென்னாகரம் அருகே அமைந்துள்ள குள்ளனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் விவரங்கள் அப்டேட் செய்ய முகாம் நடைபெற்றது. முகாமில் பள்ளியில் படிக்கும் 420 மாணவர்களின் விவரங்கள் அவர்களது பயோமெட்ரிக் விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டன என்று தலைமை ஆசிரியர் சிங்காரவேலன் தெரிவித்தார்.