வாலாஜாபாத், செப்.4: செயின்ட் ஆண்ஸ் ஆலம்னி கிளப் சார்பில், சென்னை கெருகம்பாக்கத்தில் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில், 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், வாலாஜாபாத் அகத்தியா பள்ளி மாணவர் அணியும், சென்னை செயின்ட் பீட்டர் பள்ளி மாணவர் அணியும் மோதின. போட்டியின் முடிவில், வாலாஜாபாத் அகத்தியா பள்ளி கைப்பந்தாட்ட அணி 11:6 என்ற விகிதத்தில் வெற்றி வாகை சூடியது. வெற்றி பெற்ற அகத்தியா பள்ளி அணிக்கு கோப்பையும், ₹5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.இதில், பங்கேற்ற மாணவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களை பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் மற்றும் பள்ளி முதல்வர் தேன்மொழி ஆகியோர் பராட்டினர்.