திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூர் திமுக செயலாளராக பணியாற்றி வந்த எம்.ஜெ.ஜோதிகுமாரை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், பேரூர் திமுக பொறுப்பாளராக முன்னாள் பேரூர் திமுக செயலாளர் சி.ஜெ.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டார். அவர் பள்ளிப்பட்டு பேரூர் திமுக நிர்வாகிகளுடன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர், திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏவை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சி.ஜெ.சீனிவாசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.ரவிந்திரநாத், பள்ளிப்பட்டு பேரூராட்சி தலைவர் மணிமேகலை, பேரூர் திமுக நிர்வாகிகள் ஆறுமுகம், விஜியலு, குணசேகர், லோகநாதன், ஜெயலட்சுமி, ஜெகதீசன், விவசாயி வேலு, கலீல், பேரூராட்சி கவுன்சிலர்கள் கபிலா சிரஞ்சிவி, புவனா மோகன்ராஜ், பானு ஜெகதீஷ், சுவப்னா முரளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக பேரூர் பொறுப்பாளர் செந்தில்குமார் கலைஞர் உருவப்படத்திற்கும், காந்தி, அம்பேத்கர் ஆகியோர் சிலைகளுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.