பள்ளிப்பட்டு, ஜூலை 3: பள்ளிப்பட்டு அருகே, வடகுப்பம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று பகல் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. அர்ஜூனன் வேடமிட்ட தெருக்கூத்து கலைஞர் சிவ பெருமானிடம் வரம் வேண்டி தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியில், குழந்தை வரம் வேண்டி பெண்கள் தபசு மரத்தடி மண் தரையில் குப்புறப்படுத்து வழிபட்டனர். எலுமிச்சை பழங்கள், குங்குமம், விபூதி மற்றும் பூக்கள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் மீது வீசினர். அதை ஆர்வமுடன் பெண்கள் தங்கள் மடியில் தாங்கியவாறு பெற்றுக் கொண்டனர். விழாவில், முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
பள்ளிப்பட்டு அருகே திரவுபதி அம்மன் கோயில் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி
0