ஓசூர், ஜூன் 27: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று(27ம் தேதி) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு ஓசூர் மீரா மஹாலில் நடைபெறும் நன்றி அறிவிப்பு கூட்டத்திலும், காலை 11 மணிக்கு ஓசூர் சீதாராம்மேடு அரசு உருது மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்கள் திறப்பு விழா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
எனவே, நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், கிளை செயலாளர்கள், பிஎல்ஏ 2, பிஎல்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு பிரகாஷ் எம்எல்ஏ
தெரிவித்துள்ளார்.