தொண்டி,செப்.3: தொண்டி அருகே நம்புதாளை அரசு உயர்நிலை பள்ளிக்கு வண்ணம் பூசக்கோரி திருவாடானை எம்எல்ஏவிடம் பெற்றோர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. தொண்டி அருகே நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்வு பெற்று புதிய கட்டிடத்தில் செயல்பட துவங்கியது. இந்த கட்டிடம் தற்போது முற்றிலும் பொலிவிழந்து பழைய கட்டிடம் போல் உள்ளது. அதனால் இந்த கட்டிடம் முழுவதும் வண்ணம் பூசி தர நடவடிக்கை எடுக்க கோரி திருவாடானை எம்எல்ஏ கருமாணிக்கத்திடம் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ரபீக் ராஜா மனு கொடுத்தார். ஒன்றிய கவுன்சிலர் சுமதி முத்துராக்கு, தலைவர்கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
பள்ளிக்கு வண்ணம் பூச வேண்டும் எம்எல்ஏவிடம் மனு
previous post