தொண்டி,ஆக.1: முகிழ்த்தகம் அரசு பள்ளியில் காலை சிற்றுண்டி பணியாளர் குழந்தைகளை தகாத வார்த்தைகள் கூறியதாக பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.தொண்டி அருகே முகிழ்த்தகம் கிராமத்தில் நேற்று முன்தினம் கோவில் திருவிழாவில் சாமி கும்பிடுவதில் இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது ஒரு பிரிவினரின் குழந்தைகளை தகாத வார்த்தைகள் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று பள்ளிக்கு சென்ற குழந்தைகளை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் மற்றும் போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், குழந்தைகளை பள்ளியில் விடுமாறு கேட்டனர்.
பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுப்பு
52
previous post