கோவை, ஜூன் 27: கோவை கணபதியில் செயல்பட்டு வரும் சிஎம்எஸ் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டி நேற்று துவங்கியது.
இந்த போட்டில் மாணவர்கள் பிரிவில் 25 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்றுள்ளன. நேற்று காலை முதல் மாலை வரை நாக்அவுட் போட்டிகள் நடைபெற்றன. இதில், மாணவிகள் பிரிவில் சிஎம்ஸ் பள்ளி, பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் பள்ளி, காரமடை எஸ்விஜி பள்ளி ஆகிய நான்கு பள்ளி அணிகள் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அதேபோல, மாணவர்கள் பிரிவில் சிஎம்எஸ் பள்ளி, ஏபிசி பள்ளி, ஸ்ரெசென்ட் ஆகிய பள்ளி அணிகள் லீக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.