கோவை, மே 29: கோவை மாவட்டத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் தூய்ைம பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, பள்ளியின் வளாகத்தை தூய்ைம செய்து தேவையற்ற பொருட்களை நீக்க வேண்டும். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். மேலும், நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரங்களை கண்டறிய வேண்டும். மாணவர் சேர்க்கை விவரம், துணை தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவர்களின் விவரங்களை கண்டறிய வேண்டும். மாணவர்களின் விவரங்களை எமிஸ் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்
0