திருப்புத்தூர், நவ.21: பள்ளி,கல்லூரி பகுதியில் போதைப் பொருள் விற்றால், கடைக்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும் என திருப்புத்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்புத்தூர் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் தலைமையில், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கிராமங்களில் போதை பொருள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை ஏதும் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்களை கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் பள்ளி,கல்லூரி அருகே போதை பொருள் மற்றும் கூலிப், புகையிலை விற்றால் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் துறையுடன் சேர்ந்து திடீர் ஆய்வு செய்து கடையை சீல் வைக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் திருப்புத்தூர், நாச்சியாபுரம், நெற்குப்பை, திருக்கோஷ்டியூர், கீழச்சீவல்பட்டி ஆகிய காவல் நிலையங்களையும் சேர்ந்த சார்பு ஆய்வாளர்கள், அனைத்து வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி,கல்லூரி பகுதியில் போதைப் பொருள் விற்றால் கடைக்கு சீல்
0
previous post