அரவக்குறிச்சி, ஜூன் 26: பள்ளப்பட்டியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் கழிவுநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் ஷாநகர் முதல் ஷபியா நகர் வரை கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியால் மணல்கள், கற்கள் சாலையில் குவிந்து கிடக்கிறது.
இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் முறையாக கழிவுநீரை வெளியேற்றி பணிகள் செய்யாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி உள்ளதாது. கடமைக்கு பணி செய்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கொசுக்கள் தொல்லை ஏற்படுவதுடன். டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே உடனடியாக பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.