காரைக்குடி, மே 24: காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேரூர் திமுக சார்பில் சிவகங்கை மாவட்ட செயலாளர், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனின் தாயார் கரு.கருப்பாயி அம்மாள் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி தலைமை வகித்தார். பள்ளத்தூர் பேரூர் கழக செயலாளர் அசோக் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சாக்கோட்டை ஒன்றிய பொருளாளர் மனச்சை பாண்டி ஒன்றிய துணைச் செயலாளர் கோட்டையூர் சுப்பிரமணியன் நகர அவைத் தலைவர் ராமு, சாக்கோட்டை ஒன்றிய துணைச் செயலாளர், கவுன்சிலர் வெள்ளையம்மாள் பள்ளத்தூர் நகரத் துணைச் செயலாளர் ராஜேந்திரன் சந்திரன் நகரப் பொருளாளர் கொத்தரி பைரவன் மற்றும் மகளிர் அணி கலைமணி உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.