காரைக்குடி, மே 20: காரைக்குடி அருகே பள்ளத்தூரில் திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவுவிழா, புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா மற்றும் திராவிடமாடல் அரசின் வரலாற்று சாதனைகள் விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செல்வமணி வரவேற்றார். தி.க மாவட்ட தலைவர் வைகறை தலைமை வகித்தார். பெரியார் பெருந்தொண்டர் கழக காப்பாளர் சாமிதிராவிடமணி முன்னிலை வகித்தார்.
திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி வாழ்த்துரை வழங்கினார். திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார் மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் நோக்கவுரையாற்றினார். திமுக பள்ளத்தூர் பேரூராட்சி செயலாளர் அசோக், தி.க நிர்வாகிகள் செல்வம் முடியரசன், ஜெதீசன், கொரட்டி பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லல் ஒன்றிய தலைவர் சுப்பையா நன்றி கூறினார்.