திருக்குழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே இசிஆர் சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் பரிதாபமாக பலியானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம் அடுத்த வாயலூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜீன்ன் (34). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் அதேப் பகுதியில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்று வருவதாக வீட்டில் சொல்லி விட்டு சென்றவர். இரவு முழுதும் வீடு திரும்பாததால் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது சம்பந்தபாக சதுரங்கப்பட்டினம் போலீசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், இசிஆர் சாலை அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக அவ்வழியே வந்தவர்கள் சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார், அங்கு சென்று பார்த்து விசாரித்ததில் இறந்துக் கிடந்த நபர் காணாமல் போன அர்ஜீனன் என்பது தெரிய வந்தது, பின்னர் இறந்துப் போன அர்ஜீனின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.