கடையநல்லூர், ஆக. 23: கடையநல்லூரில் பல்வேறு திட்டப்பணிகளை தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் கடையநல்லூர் ஒன்றியம் நயினாரகரம் ஊராட்சிக்குட்பட்ட மங்களாபுரம் சமத்துவபுரம் பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் அங்குள்ள பள்ளியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மேலக்கடையநல்லூரில் அங்கன்வாடி பள்ளிக்கு சென்ற கலெக்டர் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து நகர்ப்புற சுகாதார நிலையம், மகப்பேறு வளாகம் கட்டும் பணியை பார்வையிட்டார். பின்னர் மலம்பேட்டை தெருவில் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான பணியை பார்வையிட்டார். பின்னர் கிருஷ்ணாபுரத்தில் 40 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வரும் பட்டதாரி விவசாயிகளை சந்தித்தார். அங்குள்ள நவீன தக்காளி தோட்டத்தில் நிழல் வலை பண்ணைத்திடலை பார்வையிட்டார். தொடர்ந்து கருப்பாநதி கலைமான் நகரில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் பாலசுப்பிரமணியன், தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாஷினி, கடையநல்லூர் நகராட்சி ஆணையர் சுகந்தி, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, முருகன் பங்கேற்றனர்.
பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் கமல் கிஷோர் ஆய்வு அங்கன்வாடி மையத்தில் உணவின் தரத்தை பரிசோதித்தார்
previous post