Monday, February 26, 2024
Home » பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 65 வாகனங்கள் ஏலம்

பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 65 வாகனங்கள் ஏலம்

by Ranjith

 

திருப்பூர், ஜன.3: திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. அந்த வகையில் வடக்கு போலீஸ் நிலையத்தை சேர்ந்த 65 வாகனங்கள் திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 5ம் தேதி மதியம் 2 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது.

ஏலம் கோர விருப்பம் உள்ள நபர்கள் ஆதார் கார்டு, வைப்புத் தொகை ரூ.5 ஆயிரம் வங்கி வரைவோலையாக தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 4 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இரு சக்கர வாகனம் ஏலம் எடுக்க விரும்புவர்கள் வடக்கு போலீஸ் நிலையங்களில் சென்று ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம். கூடுதல் விபரங்களுக்கு வடக்கு தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு அணுகலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

1 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi