பல்லடம், ஜூலை 21:பல்லடம் நகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது. பல்லடம் நகராட்சி பகுதியில் சாலையோரத்தில் வியாபாரம் செய்து வரும் 8 பேருக்கு பாரத பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.10 ஆயிரமும், ஏற்கனவே கடன் உதவி பெற்று திரும்ப செலுத்தியவருக்கு ரூ.20 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.1லட்சம் வங்கி கடன் உதவிக்கான உத்தரவு ஆணையை பயனாளிகளுக்கு நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் வழங்கினார். இந்த நிகழ்வில் நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார், கவுன்சிலர் சசிகுமார், நகரமைப்பு ஆய்வாளர் வரதராஜன், நகர்ப்புற வாழ்வாதார இயக்க சமுதாய அமைப்பாளர் பாக்கியம்மாள், திமுக நிர்வாகிகள் ரத்தினசாமி, மார்க்கெட் தங்கவேல்,ஜாகீர்உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.