நன்றி குங்குமம் டாக்டர் டியோடரண்ட், பாடி ஸ்ப்ரே மற்றும் பர்ஃப்யூம் மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து, அரோமா தெரபிஸ்ட் கீதா நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். டியோடரண்ட், பாடி ஸ்ப்ரே மற்றும் பர்ஃப்யூம் இவை மூன்றும் ஒன்று என பலரும் நினைத்திருக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. ஏனென்றால், டியோடரண்ட், பாடி ஸ்ப்ரே ஆகிய இரண்டும் உடல் துர்நாற்றத்தைப் போக்குவதற்காகப் பயன்படுத்துவதாகும். ஆனால், பர்ஃப்யூம் எனும் வாசனை திரவியம் தன்னைச் சுற்றி மணம் பரப்புவதற்காகப் பயன்படுத்தப்படுவது. பர்ஃப்யூம்களை பொருத்தவரை வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தக் கூடியவை. இது கிருமிகளை அழிக்கவோ, வியர்வையின் அளவை குறைக்கவோ செய்யாது. இவற்றை உடைகளில் மட்டுமே, ஸ்பிரே செய்ய வேண்டும். பொதுவாக பர்ஃப்யூம்கள் மூன்று வகைகளாக தயாரிக்கப்படுகின்றன. பேஸ் நோட்ஸ், மிடில் நோட்ஸ், டாப் நோட்ஸ் என்று அவற்றைச் சொல்வார்கள். இதில் பேஸ் நோட்ஸ் தவிர மற்ற இரண்டால் நம் உடலுக்கோ, சுற்றுப்புறச் சூழ்நிலைக்கோ எந்த ஒரு பாதிப்பும் பெரிதாக வராது. ஆனால், ஸ்ட்ராங்கான பேஸ் நோட்ஸ் பர்ஃப்யூம்கள் நம் உடலையும் சுற்றுப்புறத்தையும் பாதிக்கும் தன்மை உடையவை. இதனுடைய அடர்த்தியான வாசனையால் சருமத்தில் அலர்ஜி, டெர்மடைட்டிஸ், மங்கு விழுதல் போன்ற பிரச்சனைகள் உருவாக வாய்ப்புண்டு. டியோடரண்ட் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுப்பதுடன், நறுமணத்தின் மூலம் துர்நாற்றத்தையும் குறைக்கும். ஆனால், வியர்வை வெளியேறுவதைக் குறைக்காது. இதை, சருமத்தில் நேரடியாக உபயோகிக்கலாம். அதுபோன்று டியோடரண்ட்டின் இன்னொரு வகையாக பார்க்கப்படும் ஆன்டிபெர்ஸ்பிரன்ட் என்பது வியர்வை சுரப்பிகளின் துவாரங்களில் படிந்து, வியர்வையின் அளவை குறைப்பதுடன், கிருமிகளின் வளர்ச்சியைக் குறைத்து, துர்நாற்றத்தை மறைக்கும். பொதுவாக, டியோடரண்ட்கள் ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.அதனால்தான் துர்நாற்றம் களையப்படுகிறது. டியோடரண்ட்டில் அலுமினியம் குளோரைட், ஜின்க் ஆக்ஸைடு போன்ற வியர்வையைத் தடுக்கின்ற மூலப்பொருட்களும் வாசனை எண்ணெய்களும் சேர்க்கப்படுகின்றன.அதுபோல, பாடிஸ்ப்ரே தயாரிப்பில் பர்ஃப்யூம்கள் போல அடர்த்தியான எசன்ஷியல் எண்ணெய்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும், ஆல்கஹாலுடன் டிஸ்டில்ட் வாட்டர் சேர்க்கப்படுகிறது. இதனால் பாடிஸ்ப்ரே நல்ல நறுமணம் தருகிறது. ஆனால், இவ்வாசனை வெகு நேரம் உடலில் தங்காது. வியர்வைச் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தாது. பாடி ஸ்ப்ரே எந்த இடத்தில் உபயோகிக்க வேண்டும் என்றால் கழுத்து, நெஞ்சுப்பகுதி, மணிக்கட்டின் உள்புறம், காதுகளுக்குப் பின்னால் மற்றும் முழங்கை உட்புறம் ஸ்ப்ரே செய்யலாம். நறுமணத் தேவை என்பது வியர்வை நாற்றத்தை மறைக்கவே. அதனால் பர்ஃப்யூம், பாடி ஸ்ப்ரேவை விட டியோடரண்ட் தான் சிறந்தது. மற்ற வாசனை திரவியங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. நறுமணம் தரும் திரவியங்கள்
இதுவகை வாசனை திரவியம் குறைவான ஆல்கஹால் கொண்டது. சிறிய அளவில் பூசிக் கொண்டாலே நீடித்த வாசனையைக் கொடுக்கும். முடி, ஆடைகளில் இதனை தெளிக்கலாம். எட்டு மணி நேரம் இதன் வாசனை நீடிக்கும்.
இது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வாசனை திரவியமாகும். விலையும் குறைவானது. தினசரி பயன்பாட்டுக்கு உகந்தது. இதை உபயோகிக்கும்போது ஒரு பூரணமான நறுமணத்தை தந்து புத்துணர்ச்சியளிக்கிறது. இதன் நறுமணம் நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை நீடிக்கும். இது கோடைக்காலத்துக்கு ஏற்ற வாசனை திரவியமாகும்.
மற்ற வாசனை திரவியங்களைவிட விலை குறைவு. இது அதிகளவில் பயன்படுத்தும்போதுதான் வாசனையே தெரியும். எனவே பெரிய அளவிலான பாட்டில்களில் விற்கபடுகிறது. வெயில் காலங்களில் உபயோகிப்பதற்கு ஏற்றது. குறைந்தது இரண்டு மணி நேரமே இதன் வாசனை இருக்கும்.
இது மற்ற வாசனை திரவியங்களில் இருந்து மிகவும் மென்மையான, நுட்பமான வாசனை திரவியமாகும். இதுவும் விலை குறைவானது தான். இது ஆல்கஹாலுக்கு பதில் வாசனை திரவியமும், தண்ணீரும் சேர்ந்த கலவை ஆகும். இரண்டு மணி நேரமே நீடிக்கும்….