வேலூர், நவ.16: தீபாவளி பண்டிகை கொண்டாட பரோலில் சென்ற 10 கைதிகள் வேலூர் சிறைக்கு திரும்பியதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதிலும் உள்ள சிறைகளில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நன்னடத்தை கைதிகள், முக்கிய பண்டிகைகளை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட பரோல் வழங்குவது வழக்கம். அதன்படி வேலூர் மத்திய சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட பரோல் வழங்க அனுமதி ேகட்டு 40 ஆயுள் தண்டனை கைதிகள் சிறைத்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே மனு அளித்திருந்தனர். அவர்களில் 30 பேருக்கு பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கடந்த 9ம் தேதி முதல் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவர்களில் 10 பேர் நேற்று முன்தினம் வேலூர் மத்திய சிறைக்கு திரும்பினர். மீதமுள்ள 20 கைதிகள் இன்று மாலைக்குள் சிறைக்கு திரும்ப உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரோலில் சென்ற 10 கைதிகள் வேலூர் சிறைக்கு திரும்பினர் தீபாவளி பண்டிகை கொண்டாட
185