பெரம்பலூர், செப்.1: கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக பொது மக்கள் இளநீர், மோர், சர்பத் மற்றும் இரசாயன குளிர்பானங்கள் மற்றும் நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு போன்றவற்றை நாடிச் செல்வதைபோல், குளிர்ச்சி தரும் பழங்களான தர்பூசணி, முலாம்பழம் ஆகியவற்றையும் தேடிச் சென்று வாங்கி உண்பது வழக்கம். இதற்காக செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், கள்ளக் குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை, சேலம் மாவட்டம் தலைவாசல் மற்றும் தம்மம்பட்டி, திருச்சி மாவட்டம், துறையூர் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு விற் பனை செய்வது வழக்கம்.
குறிப்பாக ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் சீசனைத் தொடங்கி விற்பனையில் கோலோச்சம் தர்பூசணிப் பழங்கள், நடப்பாண்டு பிப்ரவரி மாதமே வருகை தந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் கடந்த பிறகும் தர்பூசணி பழங் களின் விற்பனை தட்டுப் பாடின்றி மலைபோல் குவிக்கப்பட்டு, மக்களின் சூட்டைதணித்து வருகிறது.
தற்போது தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் காலத்திலும் மேல் மருவத் தூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தர்பூசணி விற்பனை தங்கு தடை யின்றி நடைபெற்று வருகிறது. இவை கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படு கிறது. இதனால் ஒரு பழம் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விலைவைத்து விற்கப் படுகிறது. இதனை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்லுகின்றனர்.