செய்முறைதண்ணீரில் சுமார் 3 மணி நேரம் ஊற வைத்த பாசிப்பயிரை நன்கு மைய அரைக்கவும். நறுக்கிய பசலைக்கீரை, பச்சை மிளகாய், மல்லித்தழையை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையை பாசிப்பயறு மாவில் சேர்க்கவும். இதனுடன் இட்லி மாவு, சீரகம், துருவிய கேரட், உப்பைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். தயாரான மாவை மிதமானச் சூடு செய்த கல்லில் பேன் கேக்கினை சுடவும். போதுமான எண்ணெயைச் சேர்த்து பேன் கேக்கை இருபுறமும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். சுவையான பருப்பு மிக்ஸ் கீரை பேன் கேக் தயார். சுவையான தக்காளி சட்னியுடன் பேக் செய்யவும்.குறிப்பு * கூடுமானவரை குழந்தைகளுக்குத் தயார் செய்யும் உணவில் பேக்கிங் சோடா, பேக்கிங் உப்பைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். பேன் கேக் சாஃப்டாக இருக்க சிறிது வெண்ணெயை உறுக்கி மாவில் சேர்த்தால் போதும். *; குழந்தைகளுக்குப் பிடித்த காய்கறிகளைச் சேர்த்து பேன்கேக் செய்யலாம்.