திண்டுக்கல், செப். 5: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் டேலண்ட் கோப்பைக்கான மாநில அளவிலான 10, 13, 15 வயது பிரிவுகளில் கால்பந்து போட்டிகள் நடந்தது. இதில் 24 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் லீக், நாக் அவுட் முறையில் நடந்தன. இதில் 10 வயதில் மதுரை ஆக்மி அணி, 13 வயதில் ஓசூர் ஜஸ்ட் ப்ளே அணி, 15 வயதில் மதுரை ஆக்மி அணி முதலிடம் பிடித்தனர். பரிச்சளிப்பு விழாவிற்கு மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். துணை தலைவர் ரமேஷ் பட்டேல், கால்பந்து பயிற்சியாளர் டைட்டஸ் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, சான்றிதழ், பரிசு தொகை வழங்கப்பட்டது.