விருதுநகர், மே 27: பராமரிக்காத மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மனு அளித்தார்.விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் வெம்பக்கோட்டை பனையடிப்பட்டியை சேர்ந்த மாரியப்பன்(64) நேற்று மனு அளித்தார். மனுவில், 64 வயதில் நுரையீரல் தொற்று நோயில் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறேன். முதல் மனைவி 2 ஆண் குழந்தைகளை விட்டு வேறு நபருடன் சென்று விட்டார். 2 ஆண் குழந்தைகளை காப்பாற்ற இரண்டாவது திருமணம் செய்து அவருக்கும் 3 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் 5 குழந்தைகளையும் வளர்த்தார்.